ஒரு உண்மையை படம் பிடித்துக்காட்டும் "பச்சை"

Interview Date:
Tue, 2010-05-25 (All day)

மணப்பாறை பக்கத்தில் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை முடித்துவிட்ட ஒருவனின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்த திரைக் காவியமாக்கி வந்திருக்கும் "பச்சை என்கிற காத்து" திரைப்படத்தின் இயக்குனர் கீரா தனது அனுபவத்தை  பகிர்ந்து கொண்டபோது...

இந்த திரைப்படத்தின் பச்சை என்கிற கதாபாத்திரத்தை உருவாக்க நிஜத்தில் பச்சை என்கிற ராம்குமார் பற்றிய செய்திகளை சேகரிக்க மணப்பாறையில் பல நாட்கள் தங்கியிருந்து பச்சை வாழ்ந்த அந்த ஊர்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை பச்சை நடந்து கொள்ளும் வாதத்தையும் அவனது பேச்சு நடை உடை எல்லாவற்றையும் விரிவாக கேட்டறிந்த பின்புதான் இந்த திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

இன்றைக்கு நமது கிராமங்களில் அரசியல் கடைநிலை தொண்டர்கள் எத்தனையோ பேர் வார்க்கையை வயதை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பச்சை என்கிற தனிமனிதனின் வாழ்க்கை மூலமாக அடித்தட்டு தொண்டனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதையும் பல உண்மைகளையும் அரசியல் வாதிகளின் அணுகுமுறைகளையும் தெளிவாக காட்டுவதற்கு முயற்ச்சி செய்திருப்பததான் இந்த "பச்சை என்கிற காத்து".

இந்தப் படத்தை நானும் எனது நண்பர்களும் இணைந்துதான் தயாரிக்கிறோம். இந்த படத்தின் கதையை கிட்டத்தட்ட இருநூறு தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருப்பேன். எல்லோரும் கதையை கேட்டார்களே தவிர யாரும் திரைக்கதையை படித்துப் பார்க்ககூட முன்வரவில்லை. முடிவில் நாமே தயாரிக்கலாம் என்று முடிவு செய்து `அ' திரை என்று எனது நண்பர்களோடு இணைந்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.

உண்மையில் சொல்லப் போனால் பச்சை 27 வயதில் இறந்திருக்கிறான். ஆனால் அவன் வாழ்ந்த மணப்பாறை மக்களின் முகங்களில் எந்த வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள். அப்படி என்ன? அவன் யார், கடைநிலையிலிருந்து உயர பறக்க ஆசைப்பட்ட பச்சை என்கிற காத்து என்னவானான்? என அவரவர் பார்த்த கோணங்களில் அழுத்தத்தோடும் எள்ளி நகையோடும் எத்தனிப்போடும் சொல்கிறார்கள். இப்படி திசையற்று ஓடியவனை இழுத்து பிடிக்க முயற்சிக்கிறது காதல், காதலும் அரசியலும் மாறி மாறி சூரையாட வாழ்வின் உச்சத்திற்கே செல்கிறான் அதுவே அவனது வாழ்வு முடிய காரணமாகிறது.

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com