இளையராஜா, பிரகாஷ்ராஜ்... அப்புறம் பிரபுதேவா! - இது தோனி அட்டகாசம்
பிரகாஷ்ராஜ் முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தோனி. அதை விட விசேசம் அந்த படத்திற்கு இளையராஜா இசை என்பது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே இளையராஜா தான் இசையமைத்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அந்த பாடல்களை லைவ்வாக கேட்க, பார்க்க வைத்து பார்த்தவர்களை பரவசப்படுத்தினார். அதை சாத்தியப்படுத்தியது பிரகாஷ்ராஜ்.
விழா முழுவதும் ராஜாவை பாராட்டிக்கொண்டே இருந்தார்கள் பிரபலங்கள். இளையராஜா இல்லை என்றால் நான் இல்லை என்று சத்தியம் செய்தார் இயக்குநர் மகேந்திரன்.
அதை விட ஒருபடி மேலே போய், இளையராஜாவின் முன்னால் தன்னை ஒரு ஞானசூனியம் என்றதோடு நில்லாமல் அவதாரம் படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து தீண்டும்போது பாடல் உருவான கதையை மிக சுவாரஸ்யமாக விவரித்தார் நாசர்.
சும்மா சொல்லக்கூடாது, செல்ல(ம்)மான நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள பிரகாஷ்ராஜ் செல்ல(ம்)மான டைரக்டராகவும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்வார் என்பதற்கு திரையிட்ட ரெண்டு பாடல்களே சாட்சி சொன்னது.
அதிலும் ஒரு பாட்டில்... ரொம்ப நாள் கழிச்சி... அட நம்ம பிரபுதேவா. பாட்டும் டான்சும் சூப்பர்.
கலக்குங்க செல்லம்.

