உடும்பு இனத்தை கேவலப்படுத்துகிறதா உடும்பன் படம்? ஒரு சர்ச்சை
மாடர்ன் சினிமா சார்பில் s .ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் உடும்பன்.இப்படத்தின் எழுத்து - இயக்கம்- இசை s.பாலன்.இதில் இந்தியாவின் no 1 பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னை சூளை சார்ந்த செல்வராஜ், வனவிலங்கு ஆர்வலர் சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைபடுத்தி இருப்பதாக புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதி லக்ஷ்மிகாந்தன் தடை உத்தரவு போட்டுள்ளார்.இதை கேட்டறிந்த தயாரிப்பாளர் s .ஜெகநாதன் அதிர்ச்சியுற்றார்.
“நாங்கள் படபிடிப்பிற்க்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரிய துறையிடம் (ANIMAL WELFARE BOARD OF INDIA )அனுமதி பெற்று நடத்தியுள்ளோம்,மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு (CENSOR BOARD ) ” U “சான்றிதழ் வழங்கியுள்ளது.ஆகவே இந்த தடை உத்தரவை முறையாக எல்லா ஆவணங்களையும் செலுத்தி,இந்த தடைகளை சட்டபூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக திரையிடப்படும்” என்று கூறினார் தயாரிப்பாளர் s.ஜெகநாதன்.

