மொத்த படப்பிடிப்பும் 4 கிலோ மீட்டருக்குள்.. "கொண்டான் கொடுத்தான்" - சாதனை
"கொண்டான் கொடுத்தான்" படத்தின் மொத்த படப்பிடிப்பையும் புதுக்கோட்டை அருகில் உள்ள தன் சொந்த கிராமத்தில் நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறார், படத்தின் இயக்குனர் கஜேந்திரன்.
தமிழ் சினிமாவில் மீண்டும் அண்ணன்-தங்கை சென்டிமெண்டை கையில் எடுத்திருக்கும் "கொண்டான் கொடுத்தான்" படத்தை தணிக்கை குழுவினர் பாராட்டி உள்ளனராம். 25 நாட்களில் மொத்த படிப்பிடிப்பும் சேர்ந்து நான்கு மாதங்களில் திரைக்கு வருகிறது இப்படம். தன் சொந்த கிராமத்தில் மச்சான், மாமன் வீடுகளிலும், சொந்த பந்தங்களையும் திரட்டியே படத்தை முடித்து, செலவை நிறையவே குறைத்து இருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள இராஜேந்திரன், இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் முடித்துவிட்டேன் என்கிறார்.
அட, ஆச்சர்யந்தான்..

