வாமனன்
Cast: Jai,
Direction:
Production:
Music:
வாமனன்
Preview Date:
Sat, 2009-07-11 09:32
"அல்டிமேட் ஸ்டார்" அஜித் மாதிரி ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு கிளம்பி வரும் ஜெய், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எங்கேங்கோ சிக்கி , பிற்பாடு தத்தக்கா பித்தக்கா என்று தப்பிப்பதுதான் வாமனன்.
டெம்போவைக் கூட்டவும் திகிலடிக்க வைக்கவும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருந்தும்... சாரி எதிலும் வெளிச்சம் இல்லை.
ரகுமான் போலிஸ் ஆபிசரா, போக்கிரியா என்று ஜெய்யை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழம்ப வைப்பது நச். லேப் டாப் பேக்கிற்குள் திருடுவதற்கு தேவையான உபகரணங்கள், செம ஸ்டைலாக உடை என ரகுமான் வளைய வந்தாலும் கடைசியில் அவர் யார் என்று தெரியும்போது அவ்வளவாக எடுபடவில்லை.
ஜெய் வேறு மாதிரி நடிக்கவும் முகபாவனைகள் காட்டவும் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அந்தக் குரல்தான் சரியாக பொருந்த வில்லை. ஒரு பக்கம் காதலுக்காக ஊர்வசி பின்னாடி அலைவது ஓ.கே. ஆனால் ரகுமான் பின்னாடி கைப்புள்ள கணக்கில் அப்பாவியாக அலையும் ஜெய் தான் படத்தின் நாயகனா? என்ற சந்தேகமே வந்து விடுகிறது.
பெயர் சொல்லி அழைத்தாலே பெரிசாக உறுமும் நாயகர்கள் நடமாடும் கோடம்பாக்கத்தில் சந்தானம் முகத்தில் துப்புவதையெல்லாம் சகித்துக்கொள்ளும் ஜெய்யை பாராட்டவா பரிதாபப்படவா என்று புரியவில்லை.
சந்தானத்தின் வாய்தான் அவ்வப்போது உதவிக்கு வருகிறது. சந்தானம் காமெடிதான் ப்ளஸ் என்று சொல்லுமளவுக்கு கதை ரொம்ப பின் தங்கி விடுகிறது. அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் அப்படியே.
ப்ரியாவின் பிறந்தநாளுக்கு ஜெய் கொடுக்கும்... இல்லை... வரையும் காதல் ஓவியப் பரிசு ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். நொடிகளுக்குள் உருவங்களை மாற்றி உச் கொட்ட வைக்கும் அந்த விரல்களின் உண்மையான சொந்தக்காரருக்கு வந்தனம்.
தே மாதிரி, லஷ்மிராயின் மரணத்திற்குப் பின் லஷ்மிராயின் வீட்டுக்குள் நுழையும் ஜெய்யின் நினைவலைகளுடன் நிஜக்காட்சிகளை பொருத்திப்பார்க்கும் காட்சியமைப்புகள் வெரி ஸ்மார்ட்.
ப்ரியாவும் லஷ்மிராயும் கூப்பிட்டார்கள் வந்தோன் என்று குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். அதோடு நடையைக்கட்டிவிடுகிறார்கள்.
டெல்லி கனேஷில் ஆரம்பித்து ரகுமான், சம்பத், தலைவாசல் விஜய், ரோகிணி, கோபிநாத், ரவீந்திரன், சண்முகராஜன் என்று எல்லோரும் எதையோ செய்யப்போவது போல கடைசிவரை பில்டப் கொடுத்து ஆயாசப்பட வைக்கிறார்கள்.
யுவனின் "ஏதோ செய்கிறாய்" பாடலும் "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" பாடலும் முணுமுணுக்க வைக்கிறது. ஆனால் எங்கேயோ பார்த்த மயக்கம் பாடலின் ஜெராக்ஸ் தான் ஒரு தேவதை பாடல் என்பதை பச்சபுள்ளக் கூட சொல்லிவிடும் அளவுக்கு காப்பி.
வாமனன் என்றால் விஸ்வரூபம் என்று அர்த்தம். ஜெய் எப்போது விஸ்வரூபம் எடுக்கிறார் என்று புரியவே இல்லை.
சாரிங்க... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
- தங்கம் ஆன்லைன் விமர்சனக்குழு
Tags

