Asal
Cast: Ajithkumar,
Direction:
Production:
Music:
அசல் விமர்சனம்

வெளிநாட்டில் வசிக்கும் அப்பா அஜீத். அவருக்கு மூன்று மகன்கள். இதில் இருவர் உண்மையான வாரிசாகவும் மகன் அஜீத் தவறான வாரிசாகவும் இருக்கிறார்கள். மகன் அஜீத் தந்தையைப்போல் அசலாக இருப்பதால் மற்ற இருவருக்கும் அஜீத் மேல் வேண்டா வெருப்பாக நடந்து கொள்கிறார்கள்.

தந்தை அஜீத்திற்கு மகன் அஜீத் மேல் மற்ற இருவரையும் விட அதிக பாசமும் நம்பிக்கையும் இருப்பதால் அஜீத்தை எப்பொழுதும் வெருக்கிறார்கள் (சம்பத்தும், ராகவ் கிருஷ்ணாவும்).

இதற்கிடையில் கடத்தல் கும்பல் ஒன்று தந்தை அஜீத்திடம் உதவி கேட்டு வந்து நிற்க தந்தை அஜீத் இதற்கு துணைபோக மறுக்கிறார். ஆனால் சம்பத்தும், ராஜீவ் கிருஷ்ணாவும் கடத்தல் கும்பலுக்கு துணைபோக சம்மதிக்கிறார்கள்.

இதற்கிடையே தந்தை அஜீத் மகன் அஜீத் மீது எல்லா சொத்துக்களையும் எழுதி வைத்துவிட, சம்பத் தந்தை அஜீத்தை கொலை செய்து விடுகிறார். இது தெரியாமல் இருக்கும் அஜீத்தை சம்பத்தும், கிருஷ்ணாவும் சேர்ந்து வீட்டை விட்டே விரட்டியும் விடுகிறார்கள்.

கடத்தல் கும்பல்களின் தலைவன் ராஜீவ் கிருஷ்ணாவை மும்பைக்கு கடத்தி வந்து விட தம்பியை மீட்க மும்பை வருகிறார் அஜீத். அவரை காப்பாற்றி வரும் வழியில் இருவரும் சேர்ந்து அஜீத்தை சுட்டு விடுகிறார்கள்.

அதிலிருந்து உயிர் பிளைத்து வரும் அஜீத் உண்மை எல்லாம் தெரிந்து இருவரையும் பழிவாங்குவதே அசல்.

வித்தியாசமான கெட்டப் என்றால் தந்தை மகனாக நடித்திருப்பதும், அந்த தாடி மீசையும் தான்.

காட்சிகளுக்கு இடையே "தலபோல வருமா" பாடலின் இரண்டு வரிகளை அடிக்கடி பயன்படுத்தியிருப்பது அஜீத்தை இன்னும் ரசிக்க வைக்கிறது.

சமீராவும், பாவனாவும் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான், பிரபுவும் வந்து தலைகாட்டி செல்கிறார். காமெடிக்கென்று யூகி சேதுவை பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்களை நிறைவு படுத்த தவறிவிட்டார்கள்.

மத்தபடி படம் முழுக்க அஜீத் சுருட்டு பிடிப்பதும், வில்லன்களுடன் மேலும் போதும் மிகவும் Þடைலிஷான அஜீத்தை காட்டியிருப்பது சந்தோஷம், அஜீத்தின் மேனரிசம் படத்துக்கு படம் வேறுபதிவாளருக்கு இதிலும் தெரிகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஓ போடலாம் காட்சிக்கு காட்சி அழகு அற்புதம். பாடல்களில் "டொட்டடொய்ங்" பாடல் ஏதோ மாதிரி இருந்தாலும் பரவாயில்லை.

மொத்தத்தில் அசல் அசலாகவே இல்லை.

Tags