நான் அவன் இல்லை - 2
Cast: Jeevan,
Direction:
Production:
Music:
நான் அவன் இல்லை விமர்சனம்

பெண்களின் பலீனமான குணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பணம், பொருள், நகைகளை கொள்ளையடிக்கும் புத்திசாலி கிரிமினல் ஜீவன்.

உலகமெல்லாம் சொத்து வாங்க ஆசைப்படும் நடிகை தீபா (லட்சுமிராய்), கணவன் மார்களிடம் கொள்ளை அடிக்கும் மாடலிங் கேர்ள் (ஸ்வேதா மேனன்), கேங்லீடராக கொள்ளையடிக்கும் மரியா (ரக்ஷனா), அடிமைக் கணவனுக்கு ஆசைப்படும் ஆந்திராக்காரி சகி (ஸ்ருதி), என தப்பான பெண்களிடம் கொள்ளை அடிக்கிறார் ஜீவன்.

எல்லாப் பணமும் எதற்கென்று பார்த்தால் அங்கே இருக்கிறது பிரமாதமான சென்டிமெண்டல் ஏரியா. இலங்கை பெண் மகாவுக்கு உதவத்தான் அத்தனை மெனக்கெடுகிறார் ஜீவன். அதில் ஜெயிக்கிறார்.

கொஞ்சம் ஒவராகத் தெரியும் குலுக்கலைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ''நான் அவன் இல்லை'' செம ஜாலியான கமர்ஷியல் படம்.

புத்திசாலித் திருடனாக ஜீவன் வெளுத்துக் கட்டுகிறார். ஒவ்வொரு வேஷத்திலும் ஜீவன் காட்டும் வித்தியாசமும் நடிப்பும் ஆஹா!. அதிலும் ஜாலி கேரக்டரில் ரக்ஷனாவை மட்டுமல்லாது நம்மையும் வாய் பிளக்க வைக்கிறார். கூடவே டம்மி பீசாக அலையும் மயில்சாமி சூப்பரோ, சூப்பர்.

கொள்ளைக்காரியாக வரும் ரக்ஷனா, ஆல் இன் அழகு ராணியாக மிரட்டுகிறார். சாமியார் வேஷத்திலும், கொள்ளைக்காரி வேஷத்தில், டைட்டான டிரஸ்ஸில் டான்ஸ் ஆடும் போதும் அம்மணி எதற்கும் ஃபிட்டாகிறார்.

படத்தில் செண்டிமெண்டல் ஏரியாவை குத்தகைக்கு எடுத்திருப்பது சங்கீதா. புத்திசாலித்தனமாக இந்தப் படத்தில் ஈழத்தின் வலியை சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் படத்திற்கு பளீச்சென உதவியிருக்கிறது.

மொத்தத்தில் நான் அவன் இல்லை போரடிக்கவில்லை.