விண்ணைத்தாண்டி வருவாயா
Cast: ,
Direction:
Production:
Music:
விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம்

மெக்கானிக் என்ஜீனியரிங் படித்துவிட்டு சினிமாவில் இயக்குனர் ஆகும் கனவோடு இந்துப் பையன் கார்த்திக், கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கிறிÞடியன் பொண்ணு ஜெÞஸி.. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதலையும், இருவரின் வாழ்க்கையையும் கவிதையாக எழுதினால் அது.. விண்ணைத்தாண்டி வருவாயா.

வேறு வேறு மதம், வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க என்று காதலை மறைக்கும் ஜெÞஸி, நீ வேணும் என்று பின்னால் அலையும் கார்த்திக். இலட்சியம் கைகூடி வரும் நேரத்தில் காதல் வந்து பிரச்சினைக்குள் விழுகிறது.

இறுதியில் காதலும், காதலர்களும் என்ன ஆனார்கள் என்பது மிச்சக்கதை.

கார்த்திக்காக சிம்புவும், ஜெÞஸியாக த்ரிஷாவும் திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள். காதல் என்றால் இது தான் என்று.. கௌதம் மேனன் கற்பூரச் சத்தியம் செய்ய வைக்கிறார்.

நடிப்பு, முகபாவணைகள், வசனங்கள் எல்லாமே மிக இயல்பாக மிக இயற்கையாக அமைந்திருப்பது நம் கண்களை திரையோடு கட்டிப்போடுகிறது.

"ஓங்கண்ணு வழியாக எவனும் என்னை பார்க்கவில்லை போல" என த்ரிஷா, சிம்புவிடம் கூறுகையில் தியேட்டரில் காதல் பொங்கி வழிகிறது.

உள்ளுக்குள்ளே படுத்தி எடுக்கும் காதலின் பக்கம் நிற்கவும் முடியாமல், வெளியில் பயமுறுத்தும் பெற்றோர் பக்கமும் நிற்க முடியாமல்.. மிக இயல்பான கதாபாத்திரத்தில் த்ரிஷா வெளுத்துக் கட்டுகிறார்.

தன்னைவிட ஒரு வயது கூடுதல் என்றாலும் மருகி, உருகி, மயங்க, கிறங்கி காதல் வசப்பட்டு பின்னால் அலையும் இளைஞன் கேரக்டரில் சிம்பு கனகச்சிதம்.

"காக்க காக்க" படத்தின் கேமராமேன் என்ற பாத்திரமாக வரும் கதாபாத்திரத்தில் படத்தின் காமெடி ஏரியாவை தூக்கி நிறுத்துகிறார். பாத்திரப்படைப்பும் நடிகர் தேர்வும் அற்புதம்.

கௌதம் மேனன், தன்னுடைய முந்தைய படத்தை வைத்து அங்கேயே நையாண்டி செய்வது குபீர் சிரிப்பு.

அளவுக்கதிகமான ஆங்கில முத்தம் கொடுத்துக் கொண்டாலும், இடுப்போடு சேர்ந்து வளைத்து இறுக்கி அனைத்துக் கொண்டாலும். காதல் காட்சிகள் விரசமாகத் தெரியாதது கௌதம் மேனனின் இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி இயல்பான காதலின் வெற்றி.

எந்த மதம் காதலுக்கு தடையாக இருந்ததோ, அந்த மதத்தின் சம்பிரதாயத்தின் துணையோடு காதலை தள்ளிப்போடுவதும், கிறிÞடியன் கல்யாணத்தை இதுவரை படங்களில் காட்டியது போல் அல்லாமல் வேறுமாதிரி காட்டி இருப்பதும்.. இயக்குனரின் பளீச் உத்தி.

திரும்ப திரும்ப ஒரே விஷயங்களை காட்டுவது கொஞ்சம் சலிப்பு. அழுத்தம் இல்லாத க்ளைமாக்Þ பெரிதாக உணர்ச்சி வசப்பட வைக்காதது மிகப்பெரிய பலவீனம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் படத்தோடு பார்க்கையில் மிக அழகாய் இருக்கிறது. பாடலாய் கேட்கும்போது வரிகள் காதுக்குள் நுழையாதது போல ஒரு உணர்வு. பின்னனி இசை பிரமாதம். மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவு சுத்தம் + சுகம்.

விண்ணைத்தாண்டி வருவாயா விண்ணைத்தாண்டிய காதல்.