Aadhavan

Aadhavan

Cast: Surya,
Direction:
Production:
Music:

ஆதவன்

சின்ன வயதில் வக்கீல் அப்பாவின் கறார் கண்டிஷன்களால் அப்பாவையே சுட்டுவிட்டு ஊரைவிட்டு கல்கத்தாவுக்கு (!) ஓடுகிறார் மாதவன் (சூர்யா).

அங்கே சாயாஜி ஹிண்டேயிடம் வளர்ப்பு மகனாக, கார்ப்பரேட் கில்லராக உருவெடுக்கிறார். மாதவன் அங்கே ஆதவன் ஆகிறார். கையில காசு, கட்டுக்கட்டா கொலை என குறிபார்த்து கொல்வதில் எக்ஸ்பர்ட்டாக மாறி மிரட்டுகிறார்.

முக்கியமான கொலைக் குற்றவாளிகளைப் பற்றி விசாரிக்கும் நீதிபதி முரளியை கொலை செய்யும் பொறுப்பு சூர்யாவுக்கு கிடைக்கிறது. குறிபார்த்து சுட எத்தளிக்கும்போது மிஸ்ஸாகிறது. காரணம் முரளி, சூர்யாவின் அப்பா.

இப்படி ஜெட் வேகத்தில் சூடுபிடித்து கிளம்பும் கதை அதன் பின்பு கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையாக ஆகி விடுகிறது.

முரளியை நீங்க கொலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எங்களை விட்டுருங்கப்பா என்று கெஞ்ச வேண்டிய அளவுக்கு வடிவேறு ராஜ்ஜியம்.

வழக்கம்போல சூர்யா, பறப்பது, தாவுவது ஆடுவது என தனது வேலையை ரொம்ப சரியாகவே செய்திருக்கிறார். அதிலும், ''யோகா''வை சூர்யா விளக்கும் காட்சியில் மிரட்டுகிறார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இது சூர்யா படமா, வடிவேலு படமா என்று சந்தேகமே வந்து விடுகிறது.

''ஐயா''வில் பார்த்த நயன்தாரா, அய்யோ நயன்தாராவாக சில இடங்களில் பரிதாபப்பட வைக்கிறார். ஆனாலும் சமீபத்திய அவரது படங்களில் காராளமாக வந்தது போல வராமல் அடக்கி, வாசித்திருப்பது ஆறுதல்.

சின்ன வயது சூர்யாவை காட்ட முயற்சித்திருப்பது நல்ல முயற்சி. ஆனால் அவ்வளவு கட்டாயமாக சூர்யா நடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. புருவம் உயரவேண்டிய காட்சிகளாக வந்திருக்க வேண்டிய காட்சிகள், உதடுகள் விரியும் காட்சிகளாக வந்திருக்கிறது. சின்ன வயது சூர்யா காட்சிகளில் வரும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

வடிவேலு காமெடிக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

ச்சும்மா, ச்சும்மா பாடல்கள் வருவதில் இல்லை சுகம். ''ஏனோ ஏனோ பனித்துளி பாடலும், அசிலி பிசிலி பாடலும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களும் சரி, பின்னனி இசையும் சரி ஹாரிஸ் ஜெயராஜ், ரொம்ப சாரி ஜெயராஜ்.

''நட்புக்காக'' போன்ற ஒரு கதைக்கு போட்டு, சூட்டு, லேப்-டாப், பிஸ்டல் என ரவிக்குமார் குழம்பி காஸ்ட்யூம் டிசெனரையும் ஆர்ட் டைரக்டரையும் மாற்றி விட்டாரோ என்னவோ, போதாக்குறைக்கு பிரஸ் மீட்டில் தமிழில் கேள்வி கேட்பது ரவிக்குமாருக்கு என்ன பிரச்சினையோ! ''எவனோ தமிழ்ல கேட்டானே'' என்று எகிறுகிறார்.

படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திரையில் தோன்றும் தயாரிப்பாளர் உதயநிதிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருப்பது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருப்பது ரொம்ப தெளிவாக தெரிகிறது. வாங்க சார்... கோடம்பாக்கம் கண்டிப்பா கைகுலுக்கு வரவேற்கும்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com