Kullanari Koottam
Cast: ,
Direction:
Production:
Music:
குள்ளநரிக் கூட்டம்

குள்‌ளநரி‌க்‌ கூட்‌டம்‌ / வி‌மர்‌சனம்‌

"வெ‌ண்‌ணி‌லா‌ கபடி‌ குழு"வி‌ல்‌ சுசீ‌ந்‌தி‌ரனி‌டம்‌ பா‌டம்‌ கற்‌ற ஸ்ரீ பா‌லா‌ஜி‌ அதே‌ கபடி‌க்‌குழுவை‌ குள்‌ளநரி‌க்‌ கூட்‌டம்‌ ஆக்‌கியி‌ருக்‌கி‌றா‌ர்‌. பெ‌யர்‌ தா‌ன்‌ இப்‌படி‌ கொ‌ஞ்‌சம்‌ லோ‌க்‌கலா‌க இருக்‌கி‌றது. ஆனா‌ல்‌ படம்‌ தரமா‌ன படம்‌ தா‌ன்‌.

கா‌தலுக்‌கா‌க எஸ்‌.ஐ. ஆகவே‌ண்‌டி‌ய கட்‌டா‌யத்‌தி‌ல்‌ தள்‌ளப்‌படும்‌ நா‌யகன்‌. அதற்‌கா‌ன முயற்‌சி‌யி‌ல்‌ ஈடுபடுகி‌றா‌ன்‌. கா‌வல்‌துறை‌யி‌ல்‌ நடக்‌கும்‌ கன்‌னா‌ பி‌ன்‌னா‌, கசமுசா‌ கூத்‌துக்‌களா‌ல்‌ வே‌லை‌ கி‌டை‌க்‌கா‌மல்‌ போ‌கும்‌ நி‌லை‌க்‌கு ஆளா‌கி‌றா‌ன்‌. அவன்‌ மட்‌டுமல்‌லா‌து நண்‌பர்‌களா‌க பழகி‌ய இன்‌னும்‌ மூ‌வரும்‌ பா‌தி‌க்‌கப்‌படுகி‌றா‌ர்‌கள்‌.

கா‌வல்‌துறை‌க்‌குள்‌ளே‌ ஊழல்‌ பெ‌ருச்‌சா‌ளி‌களா‌க இருக்‌கும்‌ மூ‌ன்‌று மொ‌டா‌க்‌குண்‌டர்‌களை‌ அள்‌ளி‌க்‌கொ‌ண்‌டு வந்‌து, அவர்‌கள்‌ செ‌ய்‌த வே‌லை‌யை‌ அவர்‌களுக்‌கே‌ தெ‌ரி‌யா‌மல்‌ லை‌வ்‌ டெ‌லி‌கா‌ஸ்‌ட்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌கள்‌. எல்‌லோ‌ருக்‌கும்‌ எஸ்‌.ஐ வே‌லை‌ கி‌டை‌க்‌கி‌றது. எஸ்‌.ஐ. ஆனா‌ல்‌ தா‌ன்‌ பொ‌ண்‌ணக்‌கட்‌டி‌த்‌தருவே‌ன்‌ என்‌று சொ‌ன்‌ன கா‌தலி‌யி‌ன்‌ அப்‌பா‌வு‌ம்‌ "எஸ்‌" சொ‌ல்‌ல சுபம்‌.

கா‌வல்‌துறை‌யி‌ல்‌ என்‌னெ‌ன்‌ன குழப்‌பங்‌களும்‌ கூத்‌துக்‌களும்‌ நடக்‌கி‌றது என்‌பதை‌ கதை‌யோ‌டு கதை‌யா‌க சொ‌ன்‌னதி‌ல்‌ இயக்‌குநரி‌ன்‌ ஒட்‌டுமொ‌த்‌த வெ‌ற்‌றி‌யு‌ம்‌ தீ‌ர்‌மா‌னி‌க்‌கப்‌பட்‌டு வி‌டுகி‌றது. குலுக்‌கல்‌ நடனம்‌ இல்‌லை‌. கதா‌நா‌யகி‌யை‌ ஈரம்‌ சொ‌ட்‌டச்‌ சொ‌ட்‌ட கா‌ட்‌டவி‌ல்‌லை‌. கா‌மெ‌டி‌ டி‌ரா‌க்‌ என்‌று யா‌ரா‌வது கத்‌தோ‌ கத்‌தெ‌ன்‌று கத்‌தவு‌ம்‌ இல்‌லை‌. குடும்‌பத்‌தோ‌டு கூச்‌சமி‌ன்‌றி‌ பா‌ர்‌க்‌கவே‌ண்‌டும்‌ என்‌று இயக்‌குநர்‌ நி‌னை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

இயல்‌பா‌ன ஒரு கதை‌க்‌குள்‌ ஒரு சமூ‌கப்‌ பி‌ரச்‌சி‌னை‌யை‌ மி‌க தெ‌ளி‌வா‌கச்‌ சொ‌ல்‌லி‌, சுவா‌ரஸ்‌யமும்‌ குறை‌யா‌மல்‌ தி‌ரை‌க்‌கதை‌ அமை‌த்‌தி‌ருப்‌பதி‌ல்‌ குருவை‌ அப்‌படி‌யே‌ பி‌ன்‌ தொ‌டர்‌கி‌றா‌ர்‌ சி‌ஷ்‌யன்‌.

நா‌யகன்‌ வி‌ஷ்‌ணுவு‌ம்‌ நா‌யகி‌ ரம்‌யா‌ நம்‌பீ‌சனும்‌ சரா‌சரி‌ நா‌யக‌, நா‌யகி‌ அடை‌யா‌ளங்‌களுக்‌குள்‌ சி‌க்‌கா‌மல்‌ இயல்‌பா‌க இருப்‌பது மெ‌ச்‌ச வை‌க்‌கி‌றது. இருவரும்‌ இயல்‌பா‌க நடி‌த்‌தி‌ருப்‌பதி‌ல்‌ பா‌ஸ்‌ மா‌ர்‌க்‌ வா‌ங்‌குகி‌றா‌ர்‌கள்‌.

எம்‌.எல்‌.ஏ ஹா‌ஸ்‌டல் வி‌வரம்‌‌, மதுரை‌க்‌ குசும்‌பு‌, தோ‌ழி‌களுக்‌கு இடை‌யே‌யா‌ன உரை‌யா‌டல்‌, அப்‌பா‌வு‌க்‌கு பயப்‌படும்‌ குடும்‌பம்‌ என இயக்‌குநர்‌ கி‌டை‌த்‌த இடத்‌தி‌லெ‌ல்‌லா‌ம்‌ கி‌ல்‌லி‌ அடி‌க்‌கி‌றா‌ர்‌.

பெ‌ரி‌ய அளவி‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌ற படத்‌தி‌ன்‌ கதா‌பா‌த்‌தி‌ரங்‌களி‌ல்‌ நடி‌த்‌த அதே‌ நடி‌கர்‌களை‌ ‌ வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு மீ‌ண்‌டும்‌ பே‌சப்‌படுகி‌ற அளவி‌ல்‌ ஒரு கதை‌ அமை‌ப்‌பது சவா‌லா‌ன வி‌ஷயம்‌. அந்‌த சவா‌லை‌ துணி‌ச்‌சலா‌க சமா‌ளி‌த்‌து வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌. அதி‌லும்‌ ஒவ்‌வொ‌ருவருக்‌கும்‌ அழுத்‌தமா‌ன கதா‌பா‌த்‌தி‌ரத்‌தை‌க்‌ கொ‌டுத்‌தி‌ருப்‌பதி‌ல்‌ சபா‌ஷ்‌ வா‌ங்‌குகி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.

அப்‌பு‌க்‌குட்‌டி‌ தமி‌ழக கா‌வல்‌ துறை‌யி‌ல்‌ உள்‌ள பி‌ரி‌வு‌களை‌ பட்‌டி‌யலி‌டுவது சரி‌யா‌ன பு‌ள்‌ளி‌வி‌வரம்‌.

சீ‌ரி‌யல்‌ கதை‌யை‌ சொ‌ல்‌வது தங்‌கள்‌ வீ‌ட்‌டு கதை‌யை‌ சொ‌ல்‌வது சுவா‌ரஸ்‌யம்‌ என்‌றா‌ல்‌, "அம்‌பு‌ட்‌டை‌யு‌ம்‌ ஒரே‌ நா‌ள்‌ல கா‌ட்‌டுவா‌ங்‌களா‌" என மறுபடி‌யு‌ம்‌ சீ‌ரி‌யலுக்‌கே‌ வந்‌து முடி‌ப்‌பது செ‌மத்‌தி‌யா‌ன கா‌மெ‌டி‌.

அண்‌ணன்‌, அண்‌ணி, அப்‌பா‌, அம்‌மா‌, மா‌மனா‌ர்‌ என கண்‌ணி‌ல்‌ தெ‌ரி‌கி‌ன்‌ற அத்‌தனை‌ பா‌த்‌தி‌ரங்‌களும்‌ மி‌ன்‌னுகி‌றா‌ர்‌கள்‌. அதி‌லும்‌ அந்‌த அப்‌பா‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கும்‌ இயல்‌ இளங்‌கோ‌, கருப்‌பா‌க இருந்‌தா‌லும்‌ கண்‌ணுக்‌குள்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌.

லஷ்‌மணி‌ன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ பா‌லா‌ஜி‌க்‌கு உறுதுணை‌. செ‌ல்‌வகணே‌ஷ்‌ வி‌ழி‌களி‌லே‌ பா‌டலி‌ல்‌ துணை‌வருகி‌றா‌ர்‌.

முதல்‌ பா‌தி‌ ரீ‌சா‌ர்‌ஜி‌ல்‌ ஆரம்‌பி‌க்‌கும்‌போ‌து சுவா‌ரஸ்‌யமா‌க இருந்‌தா‌லும்‌ போ‌கப்‌போ‌க அதை‌யே தி‌ருப்‌பி‌ தி‌ருப்‌பி‌ச்‌ சுத்‌துவதி‌ல்‌ கொ‌ஞ்‌சம்‌ அலுப்‌பு‌த்‌தட்‌டுகி‌றது. முதல்‌ பா‌டலுக்‌கா‌ன கா‌த்‌தி‌ருப்‌பு‌ம்‌ சே‌ர்‌ந்‌துகொ‌ள்‌வதும்‌ இழுவை‌யை‌க்‌ கூட்‌டுகி‌றது.

முடி‌வி‌ல்‌ ஏதோ‌ பரபரப்‌பா‌க நடக்‌கப்‌போ‌கி‌றது என்‌று பா‌ர்‌த்‌தா‌ல்‌, "லை‌ட்‌ஸ்‌ ஆன்‌" லை‌வ்‌ ஷோ‌ என்‌பது கொ‌ஞ்‌சம்‌ ஏமா‌ற்‌றத்‌தை‌த்‌ தந்‌தா‌லும்‌ பரவா‌யி‌ல்‌லை‌.

இந்‌த படத்‌தி‌ற்‌கு வே‌று டை‌ட்‌டி‌ல்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌யா‌ இயக்‌குநருக்‌கு?

குள்‌ள நரி‌க்‌ கூட்‌டத்‌தை‌ ஒருமுறை‌ சந்‌தி‌த்‌து வி‌ட்‌டு வரலா‌ம்‌. ஏனெ‌னி‌ல்‌ குள்‌ளநரி‌க்‌ கூட்‌டம்‌ நே‌ர்‌மை‌யா‌க உழை‌த்‌தி‌ருக்‌கி‌றது.