யோகி

yogi

Cast: அமீர் ,
Direction:
Production:
Music:

யோகி

சின்ன வயதில் கொடுமைக்கார அப்பாவால், அம்மா, தங்கையை இழக்கிறான் யோகி. அம்மா, தங்கை சாகக் காரணமான அப்பாவை லாரியில் தள்ளிக் கொன்றுவிட்டு அனாதையாகிறான்.

அனாதை யோகி திருடனாக, ரௌடியாக வளர்ந்து பெரியவன் ஆகிறான். தன்னுடன் ஒரு காட்டத்தை வைத்துக் கொண்டு கொள்ளையில் ஈடுபடும் யோகி, சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குழந்தையை பாதுகாக்க நேரிடுகிறது. அந்தக் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் தங்கை நினைவு வர, இனிமேல் இந்தக் குழந்தைதான் எனக்கு, இந்தக் குழந்தை என்னுடையது என்று நினைக்கிறான்.

இறுதியில் அந்தக் குழந்தைக்காக, அந்தக் குழந்தையால் தன்னுயிரை விடுகிறான்.

யோகியாக அமீர் பெரிய அளவில் கெட்டப் எல்லாம் போடாமல் மிரட்டும் கண்கள், முறுக்கு தோரணை என மாறியிருக்கிறார்.

பாம்புக்கு உம்மா கொடுக்கும் அளவு படு தில்லாக, அசால்ட்டாக நடிக்கையில் பிரமிக்க வைக்கிறார். ஆனால் அந்த பாம்பு குழந்தையின் கூடைக்குள் போகும்போது கூட சீரியஸ் ஆகாமல் இருப்பதில் அவ்வளவு யதார்த்தம் இல்லை.

அமீர் இயக்கம் இல்லை என்றாலும் திரைக்கதையும் வசனமும் எழுதி இருக்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு இன்னொருவனுடன் பழகி கர்ப்பமான பெண்ணை கட்டும் ரொம்பப் பழைய வில்லன், சொத்துக்காக குழந்தையை கொல்ல ஆசைப்படும் அப்பா.. என பழகிப்போன பழைய கதையை அமீர் படத்தில் எதிர்பார்க்கவில்லை.

கிளுகிளு ஆட்டம், தொப்புள் தாண்டவம், பார்த்ததும் காதல் என வழக்கமான ஹீரோயிஸங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது ரொம்ப நிறைவான விஷயம். ஆனால் சண்டைக் காட்சிகளில் மட்டும் அக்மார்க் தமிழ் ஹீரோ ஆகிவிடுகிறார். நானும் ஹீரோவாகிட்டேன்னு ஊரு உலகுக்கு சொல்ல அமீர் ஆசைப்பட்ட மாதிரியே இருக்கு.

சீர்மேவும் கூவத்துல பாடலில் கௌப்பலான ஆட்டம் போட்டு அசரடிக்கிறார். குழந்தையுடன் போட்டோ  எடுத்துக் கொள்ளும் காட்சியில் குழந்தையிடம் உள்ள பாசத்தை உணர்ச்சிகளில் காட்டுகிறார்.

பாதி கமர்ஷியல் படம் போலவும், பாதி கலைப்படம் போலவும் மாறி மாறி வருவதால் இந்தப் படத்தை எப்படி ரசிப்பது என்பதில் ஒரு குழப்பம் வருகிறது.

மதுமிதா, நடிகை மாதிரி இல்லாமல் அந்த கதாபாத்திரம் போலவே வாழ்ந்திருக்கிறார். சபாஷ் மதுமிதா. டூயட் இல்லாமல், ஒரு குழந்தைக்கு அம்மா பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதற்காக மதுமிதாவை பாராட்டலாம்.

சினேகன் அறிமுக நடிகர் போல இல்லாமல் அசத்தி இருக்கிறார். அமீரின் அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் தேவராஜ், கழுத்து வரை சாப்பிடும் பிச்சைக்கார, கொடுமைக்கார கணவனாக, அப்பாவாக மிரட்டியிருக்கிறார்.

குழந்தை மீது எறும்புகள் ஊறும் காட்சியில் அய்யய்யோ என மனம் பதறுகிறது. கூடவே உண்மையிலேயே அந்தக் குழந்தை மேல ஒரு பரிதாபமும், நடிக்க வைச்சவங்க மேல கோபமும் எட்டிப் பார்க்குது.

அமீர் நடித்திருக்கிறார் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ரொம்ப சராசரி படமாகத் தான் தோணும் போல..

அமீர், மதுமிதா, வாழும் இடங்களை படம் பிடித்திருப்பதில் ஒட்டு மொத்த யூனிட்டும் சபாஷ் போட வைக்கிறார்கள்!

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com