அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு திடீரென மாற்றி அமைப்பு

அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுவை முதல்வர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திடீரென மாற்றியமைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஆட்சி மன்றக் குழுத் தலைவராக அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இருப்பார்.

குழு உறுப்பினர்களாக இ.மதுசூதனன் (கழக அவைத்தலைவர்), பன்னீர் செல்வம் (கழகப் பொருளாளர் மற்றும் நிதி அமைச்சர்), விசாலாட்சி நெடுஞ்செழியன் (கழக அமைப்புச் செயலாளர்), தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர்), ஜஸ்டின் செல்வராஜ் (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர்), நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் (கழக மருத்துவ அணிச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 

அதிமுக அமைப்புச் செயலாளராகவும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருந்த மறைந்த அமைச்சர் கருப்பசாமிக்கு பதிலாக டாக்டர் வேணுகோபாலும், முன்னாள் எம்.பி.யான எஸ்.பி.எம்.சையது கானுக்கு பதிலாக தமிழ்மகன் உசேனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் கூட்டணி முடிவு, எம்.பி, எம்.எல்.ஏ., உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம், ஆட்சி மன்றக் குழுவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் இந்த ஆட்சி மன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com