ஆலங்குளம் கிளையில் பணம் வழங்கும் தானியங்கி எந்திரத்தின் துவக்க விழா

வாடிக்கையாளர் சேவையில் தொடர்ந்து தென்னகத்தில் முதலிடம் வகித்து வரும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் மற்றும் கிளைகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்கி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஆலங்குளம் கிளையில் பணம் வழங்கும் தானியங்கி எந்திரத்தின் துவக்க விழா 11.08.2010 அன்று நடைபெற்றது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. முனைவர் பேராசிரியர் சபாபதிமோகன் புதிய, பணம் வழங்கும் தானியங்கி எந்திரத்தை துவக்கி வைத்து முதல் பரிவர்த்தினையையும் ஆரம்பித்து வைத்தார். இந்தியன் வங்கி திருநெல்வேலி வட்டாரத் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் திரு. மெய்யப்பன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

புதியதாக துகவக்கப்பட்டுள்ள ஆலங்குளம் பணம் வழங்கும் தானியங்கி எந்திரத்தையும் சேர்த்து திருநெல்வேலி வட்டாரத்தில் இந்தியன் வங்கி சார்பில் 32 பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என தெரிவித்தார். இது திருநெல்வேலி வட்டாரத்தின் 16 வது பணம் வழங்கும் தானியங்கி எந்திரமாகும். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலும் திறக்கப்படவுள்ளதாக வட்டாரத் தலைவர் மெய்யப்பன் தெரிவித்தார்.

ஆலங்குளம் கிளை மேலாளர் தேவராஜன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் பகுதி வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தியன் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, பல்கலைக்கழக கிளை மேலாளர் பொன்னாயிரம், வட்டார அலுவலக மேலாளர் அழகப்பன், சந்திப்பு கிளை எல்வின் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com