இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மாவுக்கு லண்டன் டிரினிட்டி காலேஜ் விருது
லண்டன் டிரினிட்டி காலேஜ் இசைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஆறு பேரை விருது வழங்கி கெளரவித்தது.
டாக்டர் எல்.சுப்ரமணியம், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மா மற்றும் இசைக் கலைஞர்கள் வி.எஸ்.நரசிம்மன், பி, கணேஷ்குமார் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தது.
சென்னையில் நடந்த விழாவில் பாடகிகள் ஷெகினா ஷான், தன்வி ஷா, அனில் சீனிவாசன் மற்றும் சிக்கில் குருசரண் ஆகியோரின் இசை மற்றும் பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பார்வையாளர்கள் ரொம்பவே ரசித்து மகிழ்ந்தனர்.
Tags

