உலகக் கோப்பை கால்பந்து இங்கிலாந்து, அமெரிக்கா வெற்றி ஸ்லோவேனியா, அல்ஜீரியா அவுட்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின. ஸ்லோவேனியா, அல்ஜீரியா அணிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறின.

இங்கிலாந்து மற்றும் ஸ்லோவேனியா அணிகளுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடி கோல் அடிக்க முயற்சித்தன. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜெர்மெயின் டிபோயே கோல் அடித்தார்.

அதன் பிறகு முதல் பாதி ஆட்டத்திலும், இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல்கள் போடவில்லை. இதனால் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா-அல்ஜீரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என்ற சூழலில் அமெரிக்கா களம் கண்டது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்திலாவது கோல் அடித்துவிடலாம் என்று களமிறங்கியது அமெரிக்கா. ஆனால் 89-வது நிமிடம் வரை அமெரிக்காவுக்கு கோல் கிடைக்கவில்லை.

ஆட்டம் டிராவாகும் என்று நினைத்திருந்தபோது கடைசி நிமிடத்தில் அமெரிக்காவின் லேன்டன் கோல் அடித்து தனது அணிக்கு அதிர்ச்சி வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com