உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் பிரேசில்-நெதர்லாந்து

 ஆக்ரோஷமாக பந்தை உதைக்கும் பிரேசிலின் மைக்கான் (வலது). ஜோகன்னஸ்பர்க், ஜூன் 29: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஜூலை 2-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.÷ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த அணியான பிரேசில், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள சிலியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பிரேசில் வீரர்கள் அபாரமாக விளையாடி ஆட்டத்தை தங்கள் வசம் திருப்பினர். பிரேசிலின் ஜூயன், காகா, லூயிஸ் பேபியானோ, ராபினோ ஆகியோரின் ஆக்ரோஷமான ஆட்டத்தில் சிலி வீரர்கள் தடுமாறினர். ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் பிரேசிலின் ஜூயன் கோல் அடித்தார். அடுத்த 4-வது நிமிடத்தில் பிரேசிலின் மற்றொரு வீரர் லூயிஸ் பேபியானோ கோல் அடித்து சிலிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பிரேசிலின் ராபினோ கோல் அடித்தார். இதன்பிறகு சிலி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர். இருப்பினும் பிரேசில் வீரர்களின் அற்புதமான தடுப்பாட்டத்தால் சிலி வீரர்களின் கோல் முயற்சிகள் தகர்க்கப்பட்டன. இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com