கண்ணியக் குறைவாக பேசாதீர்கள் - பிரதமர் மன்மோகன் சிங்

அரசியல் ரீதியில் விமர்சனம் செய்யும்போது கண்ணியக் குறைவாகவோ பேசாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். 64-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

முதிர்ச்சி பெற்ற ஜனநாயக சமூகத்தில் விமர்சனம் வரவேற்க கூடியதுதான். ஆனால் விமர்சனங்கள் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். விவாதங்கள் மூலமும் தர்க்கங்கள் மூலமும் எதிர் கருத்துகளைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் சமீபகாலமாக அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் கடுமையானதாகவும் பண்பற்ற முறையிலும் இருப்பது அதிகரித்து வருகிறது. இது நமது பாரம்பரியத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது என்றார் அவர். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com