ஜெ. மீது அவதூறு நக்கீரன், இந்து நாளேடு மீது வழக்கு

 தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தெரிவித்தார்.

நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com