டிஷ் அறிமுகப்படுத்தும் பொழுதுபோக்கு பொனாசா - ஹாப்பி ஹோம் - சில்வர் ப்ளஸ் ரூ.1690

Wed, 2009-12-09 14:06

சென்னை, இந்தியாவின் நெ.1 டிரெக்ட் டூ ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இன்று தனது தெற்கு வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமான பொழுதுபோக்கு பொனாசா ஒன்றை அறிவித்துள்ளது. ரூ.1690 மதிப்புள்ள ஹேப்பி ஹோம் சில்வர் ப்ளஸ் பேக் ஒன்றை டிஷ் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது.

அனைத்து அம்சங்களும் நிறைந்த மிகச் சிறந்த பொழுதுபோக்காக இந்தப் பேக்கை உருவாக்கி உள்ளனர். தெற்கு மண்டல மொழிகள், விளையாட்டுகள், வர்த்தகம், செய்திகள், திரைப்படங்கள், இடைவெளி இல்லாத திரைப்படம் என முழுமையான பொழுதுபோக்கு பேக்காக இது திகழ்கிறது. டிஷ் டிவி மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிடல் தொலைக்காட்சியை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் எளிமையாக்கி உள்ளது. 

மேலும் டிஷ் டிவி அனைத்து சேனல்களையும் பார்க்க விரும்பும் ஹை எண்ட் பிளாடினம் சந்தாதாரர்களுக்கு ரூ. 1990 மதிப்புள்ள செட் டாப் பாக்ஸை இலவசமாக்கி உள்ளது. இந்தக் குறைந்த காலச் சலுகைகள் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் 2010 ஜனவரி 15 வரை கிடைக்கும்.  

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com