தங்கம் விலை பவுன் ரூ.12,472 ஆக உயர்வு
தங்கம் விலை கடந்த ஆண்டு 10ஆயிரம் ரூபாயை கடந்த போது ஏழை மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். எப்படியும் விலை குறைந்து விடும் என்று நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக தங்கம் விலை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு பவுன் 11ஆயிரம் ரூபாயைத் தொட்டது. அதன்பிறகு சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
சமீபகாலமாக தங்கம் மீது முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இத்தகைய பல்வேறு காரணங்களால் தங்கத்துக்கான தேவை உயர்ந்தது அதற்கு ஏற்ப விலையும் உயர்ந்துவிட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.12ஆயிரத்தை கடந்தது. நேற்று முன்தினம் ரூ.12,104 ஆக இருந்த தங்கம் விலை நேற்று ரூ.136 அதிகரித்து ரூ.12,240 ஆக உயர்ந்தது. இன்று தங்கம் விலை உயர்வு சற்று அதிகமாக இருந்தது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1559 ஆக இருந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.12ஆயிரத்து 472ஆக விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.232 அதிகரித்துள்ளது.
கடந்த 3நாட்களாக தங்கத்தின் விலை நாலுகால் பாய்ச்சலில் அதிகரித்தப்படி உள்ளது. இது ஏழை நடுத்தர மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் தங்கம் கை இருப்பு குறைந்துள்ளது. எனவே தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று நகை விற்பனையாளர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தங்கம் விலை உயர்வால் நகைகடைகளில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கமான கூட்டம் காணப்படுகிறது. விலை உயர்ந்து கொண்டே இருப்பது அதிக பெண் வைத்து இருப்பவர்களுக்கு வயற்றில் புளியை கரைத்துள்ளது.

