திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் வருங்காலத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

திருவாரூரில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் காங்கிரஸôர் காமராஜர் ஆட்சி அமைப்போம் எனக் கூறிவருவது ஏதோ காமராஜரே மீண்டும் வந்து ஆட்சி செய்வார் என்பதல்ல. காமராஜர் எளிமையாகவும், சிறப்பாகவும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வந்ததைத்தான் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்சியை அளிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.

வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காங்கிரஸýக்கு சட்டப்பேரவைத் தொகுதியே ஒதுக்கப்படவில்லை.  ஒரு தேசிய கட்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர் போட்டியிடும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன்படி 78 சட்டப்பேரவை தொகுதிகள் காங்கிரஸýக்கு கிடைக்கும். தற்போதுள்ள காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.

காங்கிரஸில் கோஷ்டி என்பதெல்லாம் பத்திரிகைகள், ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுதான். உண்மையில் தேர்தல் வந்துவிட்டால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உழைப்பர் என்றார் கார்த்தி சிதம்பரம். 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com