தொப்பைக்கு குட்பை டாக்டர் கார்த்திக் காஸ்மடிக் சர்ஜன்
'மடியில் கனமில்லை, எனவே வழியில் பயமில்லை' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் பணமோ விலை உயர்ந்த பொருளோ எடுத்துக் கொண்டு செல்பவர்களுக்கு வழிப்பறிக் கொள்லையர்கள் பற்றிய பயமுண்டு. அப்படி இல்லாதவர்களுக்கு பயமில்லை என்று சொல்ல வந்த பழமொழி அது.
ஆனால் இன்று பலரும் 'மடியில் கனமுண்டு, வாழ்க்கையில் பயமுண்டு' என்று இருக்கிறார்கள். இன்று உடல் பருமன் பிரச்சினை பலருக்கும் உள்ளது. உடல் எடை கூடி தொப்பையோடு அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்தால் இதய நோய்கள் பற்றிய பயத்தோடு வாழ வேண்டி இருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக வந்துள்ள நவீன சிகிச்சை முறைதான் 'லைப்போசக்ஷன்' (Lipo Suction) இந்த முறைப்படி பலருக்கும் உடல் பருமனை சீர் செய்து உற்சாகமான மறுவாழ்வு கொடுத்து வருபவர் டாக்டர் கார்த்திக். காஸ்மடிக் சர்ஜனான இவரிடம் சிகிச்சை பெற்று உடல் பருமன் குறைத்துக் கொள்பவர்களில் பட்டியலில் பல திரைப்பட நட்சத்திரங்களும் அடக்கம். இனி டாக்டர் கார்த்திக்குடன் பேசுவோம்.
இந்த உடல் பருமன்- உடல் எடை கூடுவது எதனால் ஏற்படுகிறது?
இந்த உடல் பருமனுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உடலுழைப்பு இல்லாதது, உணவுப் பழக்கம், பரம்பரைத்தன்மை இப்படி பல காரணங்களை சொல்லலாம்.
இதில் ஆண் பெண் வித்தியாசம் உள்ளதா?
இந்தப் பிரச்சினை ஆண்களுக்கும் வருகிறது. பெண்களுக்கும் வருகிறது. ஆண்களுக்கு வயற்றுப்பக்கம் இருபுறங்களிலும் டயர் சதை போடும். அடிவயிறு, பின்புறம், மார்புகளில் சதை அதிகரித்து அவர்களின் இயல்பான உடலழகைக் கெடுக்கும், பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் உடலில் பின்புறம், இடுப்பு, தொடை, கை போன்ற பகுதிகளில் சதைபோட்டு பருமன் ஏற்படும்.
ஆண்களானாலும் பெண்களானாலும் இப்படி அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்ந்ததால்தான் இப்படி பருமனாகி எடை கூடி இயங்க முடியாமல் போகிறது. இதற்கு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
எவ்வளவு காலமாக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது?
இந்த சிகிச்சை முறையின்படி எங்கு கொழுப்பு சேர்ந்துள்ளதோ அங்கு ஒரு சிறிய ஊசி மூலம் சேர்ந்துள்ள கொழுப்புகள் உறிஞ்சி எடுக்கப்படும். சிறு துவாரத்தின் மூலமே இது செய்யப்படும் இந்த சிகிச்சை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் இதை செய்ய வெளிநாடு போக வேண்டி இருக்கும். இப்போது இது நம் நாட்டில் சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல இதில் உள்ள பல குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு முழு நவீன நம்பகமான முறைகள் வந்துவிட்டன.
நீங்கள் செய்வது எந்த அளவுக்கு நவீனமானது? எந்த அளவுக்கு நம்பகமானது?
முன்பு இருந்தது சாதாரண லைப்போ சக்ஷன் முறை. இப்போது சூப்பர் பிஷியல் லைப்போ சக்ஷ்ன் (Super Fitial Liposuction) என்று வந்திருக்கிறது. இது. 'ஹை Defenition லைப்போ சக்ஷ்ன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் படி கூடுதல் பயன்கள் உண்டு. நம்பகத்தன்மை அதிகம்.
முன்பெல்லாம் இந்த முறையில் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் சில ஆண்டுகளில் கொழுப்பு சேரும். பருமன் அதிகமாகும் இப்போதும் சிலர் செய்யும் முறையில் மீண்டும் இது வருகிறது. பொதுவாக இப்படி சேரும் கொழுப்புகள் தோலிற்கும் தசைகும் இடையில் இருக்கும் அதை மட்டுமே உறிஞ்சி எடுக்கிறோம். வயிறு என்று எடுத்துக் கொண்டால் மேல் ஒரு அடுக்கும் கீழே ஒர் அடுக்கும் இருக்கும். இந்த கீழ் அடுக்கை மட்டும் எடுப்பார்கள். அத்துடன் விட்டுவிடுவார்கள். அதனால் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. நான் மேலுள்ள அடுக்கையும் இம்முறையில் உறிஞ்சி எடுத்து அகற்றி விடுவேன். நவீனமாக உள்ள கருவிகள் மூலம் இதை செய்வதால் எந்தவித அச்சமுமின்றி செய்து கொள்கிறார்கள். நான் சிகிச்சை செய்த பகுதியில் மீண்டும் வர வாய்ப்பு இல்லை. இதுதான் நான் செய்வதில் உள்ள உத்திரவாதம்.
பெண்களின் மார்பகத்தை போல இருந்த ஒர் ஆணுக்கு இந்த சிகிச்சை மூலம் சிக்ஸ் பேக்ஸ் போன்று இறுக்கமான மார்பு வடிவம் மாறிய அனுபவமும் உண்டு. அந்த அளவுக்கு இது துல்லியமானது. பாதுகாப்பானது இதை செய்து கொண்டு காலையில் செய்து மாலையே வீடு சென்று விடலாம். சில அரிதான கேஸ்களுக்கு மட்டுமே வீட்டு ஓய்வு அவசியம் இருக்கும்.
கொழுப்பு கூட, உடலில் சக்தி இழப்பு ஏற்படும் போது சக்தி கொடுத்து ஈடு செய்யும் என்பார்கள். இப்படி கொழுப்பை எடுப்பதால் உடல் சேர்வு ஏற்படுமா?
நம் உடலில் தொப்பை வீணான சதை உள்ள இடங்களில் மட்டும்தான் கொழுப்பு இருக்கிறது என்றில்லை. உடலில் பிற இடங்களிலும் அதாவது வயிறு, இதயதை சுற்றி.. இப்படி பிற இடங்களிலும் கொழுப்பு இயல்பாகவே இருக்கும். எனவே உடலிருந்து எல்லா கொழுப்பும் எடுக்கப்படுவதில்லை. எனவே உடல் சோர்வு, மயக்கம், பலவீனம் எதுவும் ஏற்படாது. இப்படி கொழுப்பு எடுத்து முடிந்தபின் பலரும் இப்படி கொழுப்பு எடுத்து முடிந்த பின் பல்ரும் 'அப்பாடா..' என்று நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள் மிகவும் சந்தோஷம் அடைந்ததாகக் கூறுவார்கள்.
இதனால் உடல் எடை குறையுமா?
இதனால் உடல் எடை அப்படியே குறைந்த விடும் என்கிற தவறான கருத்து இருக்கிறது. ஆனால் சிறிதளவே முறையும், இந்த சிகிச்சையில் சீரான உடல் எடை பராமரிக்கப்படும். உடல் எடையும் குறைய வேண்டுமென்றால் சிகிச்சைக்குப்பின் நாங்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும். எங்களிடம் இப்படி செய்து கொண்ட பின் ஒருவர் 147 கிலோ இருந்தவர் 142 ஆனார். சிகிச்சைக்குப் பிந்தையை பராமரிப்பான் இப்போது 120 கிலோ ஆகியிருக்கிறார். திடீரென்று தடாலடியாக உடல் எடை குறைப்பதை நாங்கள் விரும்புவதிலை. அது ஆரோக்கியமனதல்ல. பாதுகாப்பானதுமல்ல, அதனால் அப்படி குறைப்பதை நாங்கள் ஊக்குவப்பதில்லை.
இது தவிர வேறு என்னென்ன சிகிச்சைகள் செய்கிறர்கள்?
ஆண்களின் அளவுக்கதிகமான மார்பு வளர்ச்சிக்கான Gynane Comosita வயிறு சதைக் குறைக்கும் Tummy Tuck நெற்றியை சீரமைக்கும் Fore Head Lift புருவசீரமைப்பு செய்யும் Brow Lift முகச்சீரமைப்புக்குரிய Face Lift மார்பகம் அளவு சீராக்குதல் Breast Reduction சிறிய மார்பகத்தை பெரிதாக்கும் Breast Enlargement, தளர்ந்த மார்பகத்தை நிமிர்த்தி சீராக்கி நேர்செய்யும் Breast lift பெரிதான தளர்ந்த தொடைகளை சரிசெய்யும் Thign Lift மூக்கு குறைகளை சரிசெய்யும் Rhino Plasty வழுக்கைத் தலைக்கு முடி பொருத்தும் Hair Transplantation ஆகியவையும் செய்கிறோம். பெரும்பாலும் லைப்போ சக்ஷ்ன் சிகிச்சை தினசரி செய்து வருகிறோம்.
இந்தியாவில் சென்னையில் குமரன் மருத்துவ மனையில் நான் இந்த சர்ஜரியை செய்து வருகிறேன். பெங்களூர்,டில்லியிலும் எங்களுக்கு இயங்கி வருகிறது.
உங்களது சிறப்பம்சங்கள் என்ன?
டாக்டர் நோயாளி என்கிற அணுகுமுறை இருக்காது. நட்புடன் இணக்கமுடன் அணுகுவது எங்கள் அணுகுமுறை. இதற்கான செலவுகள் 40 ஆயிரத்திலிருந்து பிரச்சனையைப் பொறுத்து 80 ஆயிரம் வரை இருக்கலாம். பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு. அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் தங்கள் பயணத் திட்டத்தில் சென்னை வந்து இந்த சிகிச்சையும் முடித்து ஆரோக்கிய சுற்றுலாவாக செல்கிறார்கள் என்கிறார் டாக்டர் கார்த்திக், தொப்பை இனி சுமை இல்லை. தொப்பைகு கார்த்திக்கை அணுகினால் குட்பை சொல்லி விடலாம்.

