நடிகர் சரத்குமாருக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் சரத்குமார் எம்எல்ஏ வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த கடிதம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி நகராட்சி தலைவர் பானு சமீமுக்கு கடந்த 18ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் தென்காசி எம்எல்ஏ சரத்குமாரின் சுரண்டையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள சரத்குமாருக்கு தகவல் தெரிவித்தார். மிரட்டல் கடிதத்தை உடனடியாக போலீசில் ஒப்படைக்கும்படி சரத்குமார் கூறியதையடுத்து, கடிதம் தென்காசி டிஎஸ்பியிடம் கொடுக்கப்பட்டு புகாரும் அளிக்கப்பட்டது. தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்
Tags

