புதுப்பொலிவுடன் பி.ஆர். அண்டு சன்ஸ்

Thu, 2009-12-03 12:50

கடந்த 160 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த கடிகாரங்களை அளித்து வரும் ஆசியாவின் மிகப்பெரிய மல்டி பிராண்டு கடிகார ஷோரூம்களில் ஒன்றான பி.ஆர்.அண்டு சன்ஸ் நிறுவனம் தனது அண்ணாசாலை ஷோரூமை புதுப்பொலிவுடன் 2009 டிசம்பர் 2 அன்று மீண்டும் திறந்துள்ளது. 

இந்த புதிய ஷோரூமை லேண்ட்மார்க் ஸ்டோ ர்ஸ் நிறுவனர் மிஸ் ஹேமு ராமையா மற்றும் அவரது கணவர் ஜெய் வடிவமைத்துள்ளனர். ஷோரூம் திறப்பு விழாவில் கோச்சிங் பவுன்டேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் பிரதீபா கே.மகோபாத்ரா, டைட்டன் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட், டைமக்ஸ் குருப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.கண்ணன், சிட்டிசன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இசாமு கவாகுச்சி ஆகியோர் கலந்து கொண்டனர். பி.ஆர். அண்டு சன்ஸ் ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு சென்னையில் முதன் முதலாக டைட்டன், டைமக்ஸ், சிட்டிசன் மற்றும் சீகோ நிறுவனங்களில் புதிய மாடல் கடிகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இந்த புதிய ஷோரூம் நவீன காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் நூற்றாண்டு பழமையான கட்டிடக்கலை மேன்மை, காலத்தை வென்ற அற்புதமான சூழல் ஆகியன தொடர்ந்து நம்மை பிரமிப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் தற்கால டிஸ்பிளே கேஸ்களில் கடிகாரத்தை பார்வையிடும் வகையில் பரந்து விரிந்த சில்லறை விற்பனை பிரிவு பல்வேறு நவீன கண்காட்சி பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட பழமையான ஸ்விஸ் கடிகாரம் மற்றும் கிளாக்குள் கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி ஒரு மாதம் நடைபெறும். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com