பெட்ரோல், டீசல், கெரசின், சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் காஸ் சிலிண்டர் ரூ.35 மற்றும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.3 வீதம் விலையை மத்திய அரசு உயர்த்தியது; இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விலை இறக்குமதி விலையை விட குறைவாக இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.73,400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதை உடனடியாக ஈடு செய்யாவிட்டால் இன்னும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அபாயக் குரல் எழுப்பின. மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது.
Tags

