போலந்து அதிபர் தேர்தல் கோமரவ்ஸ்கி வெற்றி
போலந்து அதிபர் தேர்தலில் "சிவிக் பிளாட்பார்ம்' கட்சித் தலைவர் புரோனிஸ்லா கோமரவ்ஸ்கி வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நேரிட்ட விமான விபத்தில், போலந்து முன்னாள் அதிபர் லே கஸின்ஸி உள்பட 95 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க அண்மையில் அங்கு தேர்தல் நடைபெற்றது.
இதில், சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் சார்பில் மறைந்த அதிபர் லே கஸின்கியின் சகோதரர் ஜரோஸ்லா கஸின்கியும், சிவிக் பிளாட்பார்ம் கட்சி சார்பில் புரோனிஸ்லா கோமரவ்ஸ்கியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 53.01 சதவீத வாக்குகள் பெற்று கோமரவ்ஸ்கி வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஜரோஸ்லா கஸின்கிக்கு 46.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
Tags

