மதுரை மாவட்டத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

 மதுரை மாவட்டத்தின் முதல் பெண் டி.ஐ.ஜியாக பாலநாகதேவி பொறுப்பேற்றார். மதுரை டி.ஐ.ஜியாக இருந்த சத்தியமூர்த்தி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலநாகதேவி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட பாலநாகதேவி மதுரை மாவட்ட வரம்பின் முதல் பெண் டி.ஐ.ஜி. என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் அவர் போதைத் தடுப்புத் துறையின் உளவுப் பிரிவிலும், நீலகிரி எஸ்பியாகவும், கோவை மண்டல டிஐஜியாகவும் இருந்துள்ளார். மதுரை டிஐஜியாக பொறுப்பேற்றபின் நிருபர்களிடம் அவர் பேசுகையில், மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னரிமை கொடுக்கப்படும் என்றார். இவர் 1995ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். மதுரை டிஐஜியாக பொறுப்பேற்கும் முன் சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஐஜியாக இவர் இருந்தார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com