மத்திய சிறு தொழில் உயர்நிலை செயல் குழுவில் தமிழர்!

Tue, 2009-10-06 07:36

சென்னை: மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான உயர்நிலை செயல் குழுவில் தமிழகத்தை சேர்ந்த டி.இ. ராமகிருஷ்ணன் நியமன உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

இவர் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு சங்கத் தலைவராக உள்ளார்.

இந்த குழுவின் தலைவராக பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவல்சார் உறுப்பினர்களாக மத்திய திட்டக் குழு உறுப்பினர் அருண் மைரா, மத்திய நிதித் துறைச் செயலர் அசோக் சாவ்லா, மத்திய தொழிலாளர் நலத்துறைச் செயலர் சதுர்வேதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் திணேஷ்ராய், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சிட்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியமன உறுப்பினர்களாக இந்தியன் தொழில்கள் சங்கத் தலைவர் அனில் குப்தா, வடகிழக்கு பிராந்திய தொழில்கள் மற்றும் வணிக கூட்டமைப்புத் தலைவர் ஆர்.எஸ். ஜோஷி, ஆந்திர மாநில மகளிர் தொழில் முனைவோர்கள் சங்கத் தலைவர் ரமாதேவி ஆகியோர் உள்ளனர்.

இக் குழு பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் கருத்துக்களை 3 மாதத்துக்குள் பிரதமரிடம் அளிக்கும்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com