விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை தமிழக அரசு தீர்க்க வேண்டும் - சிபிஎம் கோரிக்கை

கூலி உயர்வு கோரி போராடி வரும் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில், தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 10,000 விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 23 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். 2011ல் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 24ம் தேதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இது குறித்து தொழிலாளர் துறை அதிகாரி முன்பு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், நியாயமான தீர்வு காணப்படவில்லை.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 40 சதவீத கூலி உயர்வு கோரி விசைதறி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நியாயமான உடன்பாட்டிற்கு வர மறுப்பதால், விசைத்தறி தொழிலாளர்கள் கடும் துயரம் அனுபவித்து வருகின்றனர்.

இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நியாயமான உடன்பாடு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com