வீனஸ் அதிர்ச்சித் தோல்வி
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வீல்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்டானா பிரன்கோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ûஸ தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் வேரா ஸ்வோனரேவா 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டெர்ûஸ வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
திங்கள்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 7-5, 7-6, 7-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் லூக்காஸ் லேக்கோ- உக்ரைனின் செர்ஜி ஸ்டாக்கோவ்ஸ்கை ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடனின் ராபர்ட்- ருமேனியாவின் ஹோரியா டீகா ஜோடி 3-6, 4-6, 6-3, 7-6, 10-6, 8-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் மகேஸ் பூபதி-பெலாரஷியனின் மேக்ஸ் மிர்யானி ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

