வெலவெலத்துப்போன அதர்வா... விளையாடிய அமலாபால்!
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் அதர்வாவும் அமலாபாலும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அதர்வாவுக்கு இது இரண்டாவது படம். அமலா பாலுடன் முதல் படம். படப்பிடிப்புக்கு முன்பாக, போட்டோ சூட் எடுத்திருக்கிறார்கள்.
அதற்கு முன்னால் அமலா பாலை அறிமுகம் இல்லையாம் அதர்வாவுக்கு. ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் தான் சொல்லியிருந்தாராம். போட்டோ சூட் ஆரம்பிக்கும்போதே அமலா பாலை கட்டிப்பிடிக்கச் சொல்லி உத்தரவிட்டாராம் டைரக்டர்.
முதல் படத்தில் கதாநாயகியுடன் அவ்வளவு நெருக்கமாக நடித்த அனுபவம் இல்லையாம் அதர்வாவுக்கு. அதனால் ரொம்பவே நெர்வசாக இருந்தாராம். ஒரு வழியாக தேற்றி தெளிவு படுத்திக்கொண்டு துணிச்சலாக அமலா பாலை கட்டிப்பிடித்தாராம் அதர்வா.
சட்டென் ஷாக் ஆகி தள்ளி நின்றாராம் அமலா பால். பதறி இரண்டடி பின்னால் வந்த அதர்வா வெலவெலத்துப்போய்... நம்ம எதோ தப்பு பண்ணிட்டோம் போல இருக்கே, இந்தப் பொண்ணு இப்டி பண்ணுதுன்னு நெனைச்சாராம். அதுக்கப்புறம் தான் தெரிந்ததாம் அது அமலா பாலின் விளையாட்டு என்று. நல்லாத்தான் விளையாடி இருக்கு கேரளப்பொண்ணு.

