அரசு செய்திப்படங்கள்
மதுரையில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் ஆய்வு செய்தார்.
திருச்சியில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னையில் அமைச்சர் பி.வி.ரமணா சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம், மருத்துவ மற்றும் மூலிகை தாவரங்களின் கண்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் 2012 ஆம் ஆண்டை அகில உலக கூட்டுறவு ஆண்டாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்னை பிரஸ் கிளப் சார்பாக "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ரங்கராஜன் மகாலஷ்மி "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோபாலகிருஷ்ணன் "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கும்பகோணம், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான என்.காமகோடி "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.











