சல்மான்கான், ரன்பீர் கபீருடன் லிங்குசாமியின் "இந்தி" வேட்டை!
"வேட்டை" படத்தை மும்பையில் பார்த்த யூடிவி குழுவினர், லிங்குசாமியை உடனே அழைத்து இதை எவ்வளவு சீக்கிரம் இந்தியில் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வோம் என்கிறார்களாம்.
மும்பையில், பாலிவுட் நடிகர் நடிகைகளுக்காக ஒரு சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்த யூடிவி ரோனி Þகுருவாலா, எந்த நடிகர்கள் சீக்கிரம் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து இந்தி "வேட்டை" ஆரம்பித்து விடுவோம் என்று லிங்குசாமியிடம் கூறி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, சல்மான் கானும், சன்பீர் கபூரும் தான் என் மனதில் இருக்கிறார்கள் என்றாராம் லிங்குசாமி. லிங்குசாமிக்கு பிடித்த கதாநாயகி அனுஷ்காவாம்.
இந்தி "வேட்டை"யையும் யூடிவியுடன் இணைந்து "திருப்பதி பிரதர்Þ" நிறுவனம் தயாரிக்கிறது.
Tags

