District News


மகளிர் சுய உதவி குழு தலைவி கழுத்தை அறுத்துக்கொலை

தூங்கிக்கொண்டு இருந்த மகளிர் சுயஉதவி குழு தலைவியை தட்டி எழுப்பி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீஸ் உடையில் வந்து கொலை செய்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை, போரூரை அடுத்த மாங்காடு அருகே உள்ளது, கெருகம்பாக்கம். அங்குள்ள ஆகாஷ்நகர் பகுதியில் ரவி (வயது 40) என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்னை பிராட்வேயில் உள்ள சரவணபவன் ஓட்டலில் மானேஜராக அவர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பெயர், அம்பிகா(35), இவர்களுக்கு பாக்கியன் (17), அரவிந்தன்(14), என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெ. மீது அவதூறு நக்கீரன், இந்து நாளேடு மீது வழக்கு

 தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தெரிவித்தார்.

ஒன்றரை கோடியில் மீனட்சி அம்மனுக்கு வைர கிரீடம்

ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய வைரக்கிரீடம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. ஒன்றரை கிலோ தங்கம், வைரம், மரகதம், மாணிக்க கற்களால் தயாரிக்கப்பட்ட அந்த வைரகிரீடத்தை அம்மன் அணிந்திருந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். 

தேமுதிக வார்டு கவுன்சிலர் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் தேமுதிகவைச் சேர்ந்த கே. சுரேஷ்(39). அதே வார்டில் இரண்டாவது முறையாக கவுன்சிலராகத் தேர்வானார். தேமுதிக நகர செயலாளராகவும் இருந்தார். அவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள ஜேசிகே நகரில் வசித்து வந்தார். வீட்டுக்கு அடுத்த தெருவில் அவரது அலுவலகம் உள்ளது. 

அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு திடீரென மாற்றி அமைப்பு

அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுவை முதல்வர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திடீரென மாற்றியமைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஆட்சி மன்றக் குழுத் தலைவராக அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இருப்பார்.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு எதிர்த்து கிருஷ்ணசாமி போராட்டம்

"அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.கோவையில் நேற்று கிருஷ்ணசாமி கூறியதாவது:பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

புழல் ஏரியில் மூழ்கி இறந்தவர்களுக்கு நிவாரண நிதி ஜெயலலிதா அறிவிப்பு

 புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தன் இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் வெளியிட்ட அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 

ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம் - அப்துல் கலாம் பேட்டி

"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார்.

பசும்பொன்னில் ரூ.39 லட்சத்தில் தியான மண்டபம் - அரசு அறிவிப்பு

"பசும்பொன்னில் ரூ.39 லட்சத்தில் தியான மண்டபம் அமைக்கப்படும்,' என இங்கு நடந்த அரசு விழாவில் அறிவிக்கபட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 104வது பிறந்த நாள், 49வது குருபூஜை நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோவை காமாட்சிபூரி ஆதினம் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. மாலையில் நடந்த அரசு விழாவிற்கு கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார்.

வழுக்கி விழுந்ததில் காயம், வீரபாண்டி ஆறுமுகம் ஓட்டு போடவில்லை

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வீட்டில் வழுக்கி விழுந்ததால், சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டளிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேட்டூர், இடைப்பாடி உள்ளிட்ட இரண்டு நகராட்சி, 19 பேரூராட்சி, 12 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலவாரியில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வசித்து வருகிறார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com