State News


ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைது

ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ராஜவீதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது33). பி.இ. பட்டதாரி. தற்போது நாமக்கல்லில் கோழி முட்டை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:-

சுரேஷ்ராஜன் இரும்பு ஆலையில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சரும், குமரி மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ் ராஜனுக்கு சொந்தமான இரும்பு ஆலை நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ளது. இங்கு கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசாரும், பொதுப்பணித்துறை கட்டிடப்பிரிவு செயற்பொறியாளர் ஆசைத்தம்பி தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரும் சோதனை மேற்கொண்டனர். 

ஆலையில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு, நிலத்தின் பரப்பளவு உள்பட பல்வேறு பிரிவுகளில் சோதனை நடந்தது. மீண்டும் இன்று போலீசாரும், அதிகாரிகளும் இரும்பு ஆலையில் சோதனை மேற்கொண்டனர். 

சமாதானத்தை கட்டியெழுப்புவதே இலங்கை பயணத்தின் நோக்கம் - அப்துல் கலாம்

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலங்கை பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012 ஐ இலங்கைஅரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இப் பிரகடனத்த்தின் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார்.

மதுரை மாவட்டத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

 மதுரை மாவட்டத்தின் முதல் பெண் டி.ஐ.ஜியாக பாலநாகதேவி பொறுப்பேற்றார். மதுரை டி.ஐ.ஜியாக இருந்த சத்தியமூர்த்தி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலநாகதேவி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட பாலநாகதேவி மதுரை மாவட்ட வரம்பின் முதல் பெண் டி.ஐ.ஜி. என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூரைக் கலக்கும் இளவரசியின் அண்ணன்!

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கூண்டோடு துரத்தப்பட்டு விட்ட நிலையில் இளவரசியை மட்டும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு வைத்துள்ளார். அதேபோல இளவரசியின் அண்ணன் கண்னதாசனும் எந்த நடவடிக்கையிலும் சிக்காமல் கமுக்கமாக விடப்பட்டுள்ளார். அவரும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை சற்றும் குறைத்துக் கொள்ளாமல் ஆடி வருகிறாராம். இது ஏன் என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்கள் குழப்பமாக வலம் வருகின்றனர்.

சபரிமலையை புறக்கணிக்க சீமான் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை மையப்படுத்தி கேரளாவிற்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது வெந்நீர் ஊற்றியது கொடூரமானது. எனவே தமிழக பக்தர்கள் சபரிமலையை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இயற்கையைத் தவிர வேறு யாராலும் என்னை சாய்க்க முடியாது - கருணாநிதி

ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே?

விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை தமிழக அரசு தீர்க்க வேண்டும் - சிபிஎம் கோரிக்கை

கூலி உயர்வு கோரி போராடி வரும் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில், தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் பந்த், தமிழக பேருந்துகள் நிறுத்தம்

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று பந்த் நடப்பதால் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. 

புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு தரும் விஜய் ஆன்டனி

ஆர்வமுள்ள வாய்ப்பு தேடும் புதிய கவிஞர்களுக்கு நான் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பினை உருவாக்கித் தருகிறார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.

 

தான் நாயகனாக நடித்து இசையமைக்கும் புதிய படமான 'நான்' படத்தில் ஒரு பாடலை எழுத அனைவருக்குமே ஒரு திறந்த வாய்ப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.

 

இந்தப் பாடலுக்கான ட்யூனை அவர் தனது www.vijayantony.com என்ற தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார். இந்த ட்யூனை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ட்யூனுக்கு ஏற்ப பாடலை உருவாக்கு விஜய் ஆன்டனியின் (vijayantonylyrics@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com