World News


மீனவர்கள் பிரச்னை தீர அப்துல் கலாம் புது யோசனை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள கலாம், இன்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கலாம் விவாதித்தார். 

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தர தயங்குகிறார் ராஜபக்ஷே

இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில், தனது அரசு விருப்பம் கொண்டிருப்பதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார். எனினும், அதற்கான கால வரையறை குறித்து, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில், மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க நகரின் மேயராக இந்தியர் தேர்வு

அமெரிக்காவின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகர் ஒன்றின் மேயராக, இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தாலி கப்பல் விபத்து, இந்தியரின் கதி என்ன?

இத்தாலியில் பாறை மீது மோதி கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, 29 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் ஒருவரான இந்தியரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.

வெள்ளை மாளிகைக்குள் புகை குண்டு வீச்சு

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது புகை குண்டு வீசப்பட்டதையடுத்து, அந்த கட்டடம் தாற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தின் மையமான வால்ஸ்ட்ரீட்டை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில் நேற்றிரவு வெள்ளை மாளிகையின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஒட்டிய உள் பகுதியில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் உளவுப் பிரிவினரும் அங்கு விரைந்து சோதனையிட்டபோது யாரோ புகை குண்டை உள்ளே வீசியது தெரியவந்தது.

மத்திய ஆசியாவில் வீ்ட்டு பிராணிகள் வளர்க்க துவங்கிய காலத்தை மாற்றிய சவுதி அகழ்வாராய்ச்சி

ஜித்தா: சவுதி அரேபியாவில் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் சில பகுதிகளில் நடத்திய சோதனையில் புதிய அகழ்வாராய்ச்சி தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு நடத்திய ஆராய்ச்சியில் அல்-மாகர் என்ற வளர்ந்த நாகரிகத்தை காண முடிகிறது. மத்திய ஆசியா பகுதிகளில் சுமார் 5,500 ஆண்டுகளாக தான் மிருகங்களை மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என கருத்து நிழவி வந்தது.

லிபிய புரட்சிப் படைகளிடம் திரிபோலி வீழ்ந்தது- கடாபியின் மகன் கைது

திரிபோலி: லிபியப் புரட்சிப் படைகளிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவுப் படையினர் தங்களது எதிர்ப்பை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து கடாபி வசம் 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியா தற்போது புரட்சிப் படையினரிடம் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடாபியி்ன் மகன் சைப் அல் இஸ்லாமையும் புரட்சிப் படையினர் பிடித்துள்ளனர்.

திரிபோலியின் மையப் பகுதியான கிரீன் ஸ்கொயர் முன்பு கூடிய புரட்சிப்படையினரும், அவர்களது ஆதரவாளர்களும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடாபியின் வீழ்ச்சியைக் கொண்டாடினர்.

இங்கிலாந்தின் மேலும் 3 நகரங்களில் கலவரம் பரவியது- இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்திரம்

லண்டன்: லண்டனில் தொடங்கிய கலவரம் தற்போது மேலும் பல நகரங்களுக்குப் பரவியுள்ளது. இதனால் பிரிமிங்காமில் நாளை தொடங்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மிகவும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாகவும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

80களில் லண்டனில் மிகப் பெரிய இனக்கலவரம் மூண்டது. லண்டனே அப்போது பற்றியெறிந்தது. தற்போது மீண்டும் ஒரு பெரும் கலவரத்தை லண்டன் சந்தித்துள்ளது. 

ஞாபகார்த்தத்திற்காக தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய இங்கிலாந்து வீரர்!

லண்டன்: ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வதற்காக, இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் பணியாற்றினார். அவர் ஆர்கில் மற்றும் சதர்லேண்ட் ஹைலேண்டர்ஸ் காலாட்படையைச் சேர்ந்தவர்கள். இந்த படை ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு பயிற்சி அளித்து வந்தது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று சீனா பயணம்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று சீனா செல்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான குழு 4 நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அவர்கள் இன்று சீனா புறப்பட்டுச் செல்கின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சீனாவுக்கு தெரிவிக்கப்படும். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com