Business News
இந்தியாவின் கடல்உணவு ஏற்றுமதி அதிகரிப்பு
புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது மேலும் அதிகரித்து இந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியன் டாலர்களாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி 2010-11ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 33.95 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டில் 8,13,091 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 19.85 சதவீதம் அதிகமாகும்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.696 அதிகரிப்பு
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் அதிரடியான விலை ஏற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.696ம், பார் வெள்ளி விலை ரூ.1450ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2612 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27940 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.20896 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.68.75 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.64255 ஆகவும் உள்ளது.
ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு கூகுள் டிவி திறப்பு
ஸ்காட்லாந்து : ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு தனது டிவி சேவையை துவங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் டிவியை பார்வையாளர்கள் ப்ரவுசர் மூலம் இணையதளம் மற்றும் டிவி வழியாக பார்க்கலாம். இந்த கூகுள் டிவி அமெரிக்காவில் வரும் அக்டோபர் மாத திறக்கப்பட உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் டிவிக்கான செட் டாப் பாக்ஸ் விலை அமெரிக்காவில் 99 டாலர் முதல் 299 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு
மும்பை : கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.46.02 ஆக உள்ளது. இந்தியாவில் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி:தீபாவளி தேவையை சமாளிக்க இறக்குமதி
மும்பை:"தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்தாலும், இந்த ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். தீபாவளிக்குள் தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம்' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி சாதாரண மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் தங்கம் வாங்க ஆசைப்படுவது எட்டாக்கனியாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சரிவு காரணமாக, அங்குள்ளவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து வரும் கடுமையான சரிவு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த 10 வாரங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு 41 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.45.38 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை அதிர வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று ரூ.19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.688 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.1210 சரிவடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2438 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26075 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.19504 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.95 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58845 ஆகவும் உள்ளது.
வி கேர் வழங்கும் பிரபாவின் புதிய சூப்பர் ஸ்பெஷாலிடி முடி சீரமைப்பு கிளினிக்
முடி இழப்பு ஒரு இயற்கையான நிகழ்முறையாக இருக்கிறது மற்றும் தனிநபர்களை பாதிக்கிறது.உரோமம் என்பது ஒருவரது தோற்றத்தில் ஒரு பிரிக்கப்பட முடியாத அங்கமாகிறது. இதனுடைய அலங்காரம் அல்லது நிறம் என்பது நபர் எவ்வாறானவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது எனலாம். ஒருவர் தமது விருப்பங்களை வெளிப்படுத்துகின்ற வாய்பை இழக்கின்ற போது அவருடைய சுயமரியாதையின் மீதும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது நிதர்சன உண்மை. உச்சந்தலையில் பாக்டீரியா, மன அழுத்தம், மோசமான ஊட்டச்சத்து, மரபணு வழுக்கை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை,முடி இழப்பு ஆகியவை எண்ணற்ற காரணிகள்.
‘டச் அண்டு டைப்’ புதிய மொபைல்கள் அறிமுகம்
மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம், புதிதாக ‘நோக்கியா எக்ஸ்3-02′ மற்றும் ‘நோக்கியா சி3-01′ ‘டச் அண்டு டைப்’ வகை மொபைல் போன்களை அறிமுகம் செய்தது.இது குறித்து இந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது:நோக்கியாவின் ‘எக்ஸ்3-02 ‘ மற்றும் ‘சி3-01′ வகை ‘டச் அண்டு டைப்’ மொபைல் போன்கள், தொடு திரை மற்றும் டைப்பிங் ஆகிய இரு வசதிகளை வழங்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட் டுள்ளன.இவ்வகை மொபைல்கள், மெகா பிக்சல் கேமரா, பேஸ் புக், மை ஸ்பேஸ், மியூசிக் ப்ளேயர், எப்.எம்.ரேடியோ

