Sports News


பயிற்சியில் சேவக் அலட்சியம்

மூன்று டெஸ்ட் தோல்விகளுக்குப் பின்பும் இந்திய வீரர்கள் திருந்தவில்லை. நான்காவது போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சேவக் உள்ளிட்டோர் பயிற்சியில் அக்கறை செலுத்தவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லும் நோக்கத்துடன் சென்ற இந்திய அணி, அடுத்தடுத்த தோல்விகளால் 0-3 என, டெஸ்ட் தொடரை இழந்து பரிதாபமாக நிற்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட், அடிலெய்டில் வரும் 24ம் தேதி துவங்குகிறது. 

ஹாக்கி, இந்திய அணி மீண்டும் வெற்றி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க ஆண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் 4-0 என வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகித்தது. நேற்று இரண்டாவது போட்டி டில்லியில் உள்ள தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடந்தது.

எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை - காம்பிர்

ஆஸ்திரேலிய தொடரில், ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டோம்,'' என, இந்திய அணி துவக்க வீரர் காம்பிர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-3 என இழந்தது. இது குறித்து காம்பிர் கூறியது: தரவரிசையில் "நம்பர்-1' இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும். இதற்கு பேட்டிங் மிக முக்கியம். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். மெல்போர்ன் நகரில், 100வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், "நடப்பு சாம்பியன்' ஜோகோவிச், இத்தாலியின் லோரன்ஜியை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-2, 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய "பார்முலா-1': வெட்டல் சாம்பியன்!

 "பார்முலா-1' கார் பந்தய அரங்கில் "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டலின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த முதலாவது இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பைனலில் புயல் வேகத்தில் பறந்த இவர், சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். "சகாரா போர்ஸ் இந்தியா' அணியின் ஏட்ரியன் சுடில் 9வது இடம் பெற்று நம்பிக்கை தந்தார். தமிழக வீரரான நரேன் கார்த்திகேயன் 17வது இடமே பெற முடிந்தது.

உலக ஸ்குவாஷ் இந்தியா தோல்வி

பாடர்பார்ன்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஜெர்மனியில் உள்ள பாடர்பார்ன் நகரில், அணிகளுக்கு இடையிலான ஆண்கள் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சவுரவ் கோசால், சித்தார்த் சச்தே தோல்வி அடைந்தனர். ஹரிந்தர் பால் சிங் சாந்து (இந்தியா)-ஸ்டீவர்ட் போஸ்வல் (ஆஸ்திரேலியா) மோத இருந்த போட்டி நடக்கவில்லை. இந்திய அணி, 5-8 இடங்களுக்கான போட்டியில், இத்தாலி அணியை எதிர்கொள்கிறது. 

பாட்மின்டன் காலிறுதியில் அஜய் ராம்

ஹோசிமிங்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீரர் அஜய் ராம் முன்னேறியுள்ளார்.

வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் வியட்நாமின் ஹோசிமிங் நகரில் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஜய் ராம், கொரியாவின் ஜோங்உயை எதிர்கொண்டார். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜய் ராம் 21-8, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இவர், இந்தோனேசியாவின் அலம்சியா யுனஸை சந்திக்க உள்ளார். 

யு.எஸ்., ஓபன் கடின சுற்றில் சோம்தேவ்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் கடின சுற்றில் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

காம்பிரின் கண் பார்வை சரியாகவில்லை * ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

ஹோவ்: நான்காவது டெஸ்டில் பின்தலையில் அடிபட்ட காம்பிருக்கு, கண்பார்வை குறைபாடு இன்னும் சரியாகவில்லை. இதனால் ஒரு போட்டிகளில் பங்கேற்பது குறித்து சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது.

சமீபத்தில் முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் அடித்த பந்தை "கேட்ச்' செய்ய முயன்ற காம்பிரின், பின் தலைப்பகுதியில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. பின் "எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எடுக்கப்பட்டது. இதன் முடிவில் பெரிய பிரச்னை இல்லை எனத் தெரிந்தது. இதனால் சசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் காம்பிர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஐ.சி.சி., அணியில் சச்சின்!

துபாய்: இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் அணியில், இந்தியா சார்பில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com