National News
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும் - பிரதமர்
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தானே புயல் நிவாரண தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எம்.கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தானே புயலால் புதுச்சேரியும், தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த முந்திரி, பலா, தென்னை மரங்களை அந்தப் புயல் வேறோடு சாய்த்துவிட்டது. ஒரு மரம்கூட தப்பவில்லை. ஒவ்வொரு மரமும் 45 ஆண்டுகள் வயதுள்ளவை.
கூடங்குளம் போராட்டக்குழுவை அகற்ற பிரதமருக்கு சாமி வலியுறுத்தல்
"கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை, போராட்டப் பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, பிரதமர் உத்தரவிட வேண்டும்,' என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே, 256வது சட்டப்பிரிவின் கீழ், கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும், முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக, அங்கிருந்து வெளியேற்றும்படி, தமிழக அரசுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக உத்தரவிட வேண்டும்.

கனிமொழிக்கு இன்னும் 21 நாட்கள் சிறை தான்?
டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், டில்லி ஐகோர்ட்டாவது, தனக்கு ஜாமின் வழங்கும் என்ற கனிமொழியின் எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறவில்லை. அவரது ஜாமின் மனுவை, 15 நிமிடங்களில் விசாரித்துமுடித்த டில்லி ஐகோர்ட், மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், சிறையில் இருப்பதால், உருவாகும் டென்ஷன் குறைக்க தியான பயிற்சி மேற்கொள்கிறார் கனிமொழி.
குஜராத் சென்றார் அத்வானி - எல்லையில் வரவேற்றார் மோடி
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை, நேற்று குஜராத் மாநிலம் சென்றடைந்தது. அவரை மாநில எல்லையில், முதல்வர் நரேந்திர மோடி வரவேற்றார். ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை நேற்று முன்தினம், டையூ- டாமன் யூனியன் பிரதேசம் சென்றடைந்தது.அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "அன்னிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், 21ம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும். ஊழல் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத யாத்திரை மேற்கொண்டுள்ளேன்,'' என தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்மூன்று மாதத்தில் தெலுங்கானா - சுஷ்மா சுவராஜ் உறுதி
"அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.,) ஆட்சிக்கு வந்தால், மூன்று மாதங்களில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற்றப்படும்,'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.
எதிர்ப்புகளை சமாளிக்க ஹசாரே ஆலோசனை - சட்ட திட்டங்களை உருவாக்கி போராட முடிவு
"ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தவித குற்றச்சாட்டுக்களை கூறினாலும், எங்கள் அமைப்பை உடைக்க முடியாது. இந்த அமைப்புக்கு, சட்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பின், உயர்மட்டக் குழு மாற்றி அமைக்கப்படும்' என, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.