Head News


பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - ஜெயலலிதா

பணியின்போது இறந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில், சென்னை மாநகராட்சியில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 76 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளர் எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். 'சிப்காட்' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ரூ.330 கோடி செலவில் கும்மிடிப்பூண்டி அருகே புதிய நீர்த்தேக்கம்

 கும்மிடிப்பூண்டி அருகே ரூ.330 கோடி செலவில் இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் - ப.சிதம்பரம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதால் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு அங்கமாக கடற்கரையையொட்டியுள்ள 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தொடர் தாக்குதல் - கருணாநிதி கடும் எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தொடர் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாரதிராஜா காங்கிரசில் சேரவேண்டும் - ஞானதேசிகன்

போயும் போயும் பாரதிராஜாவை காங்கிரசில் சேரச் சொல்லியிருக்கிறார் ஞானதேசிகன் இந்த ஆண்டு காங்கிரஸ் விட்ட முதலாவது பெரிய காமடி இதுவாகும். சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ’’நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார்.

கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்! – சீமான்

இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

நடிகர் சரத்குமாருக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் சரத்குமார் எம்எல்ஏ வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த கடிதம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி நகராட்சி தலைவர் பானு சமீமுக்கு கடந்த 18ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் தென்காசி எம்எல்ஏ சரத்குமாரின் சுரண்டையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து சட்ட அடி வாங்கும் அதிமுக அரசு

அதிமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது. அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.

மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

'இந்து முன்னணி' ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்

இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கெடுக்கப்பட்டுள்ளது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com